Sunday, April 11, 2010

நான் கருப்பன் - ஒபமா


'தான் ஒரு கறுப்பர் இனத்தை சேர்ந்தவர்' என, மக்கள் தொகை கணக்கெடுக்கும் அலுவலர்களிடம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார், அமெரிக்க அதிபர் ஒபாமா.அமெரிக்காவில், மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி, முதல் குடிமகன் என்ற முறையில், மக்கள்தொகை கணக்கெடுக்கும் அலுவலர்கள், வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவிடம் குடும்ப விவரங்களை சேகரித்தனர். அதற்கான படிவத்தில், தான் ஒரு ஆப்ரிக்க-அமெரிக்காவை சேர்ந்த கறுப்பர் என, ஒபாமா தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் இடம் பெற்றுள்ள இனம் என்ற இடத்தில், ஆப்ரிக்க-அமெரிக்காவை சேர்ந்த கறுப்பர் என ஒபாமா தெரிவித்துள்ளார். ஒபாமா தான் ஒரு வெள்ளையர் அல்லது கறுப்பர் மற்றும் வெள்ளையர் அல்லது பிற இனத்தவர் என்று தெரிவித்திருக்கலாம். ஆனால், அவர் தான் ஒரு கறுப்பர் என்று தான் தெரிவித்துள்ளார்' என்றார்.அமெரிக்காவில் உள்ளவர்களில் பெரும்பாலோர் தங்கள் இனம் பற்றி குறிப்பிடும்போது ஒன்றுக்கு மேற்பட்ட இனம் என்ற இடத்தில், பூர்த்தி செய்பவராகவே உள்ளனர்.கடந்த 2000ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 60.8 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்திருந்தனர்.

- வைரமுத்து .

No comments:

Post a Comment