Wednesday, April 14, 2010

சசிதரூர் காதலி சுனந்தாவுக்கு ரூ.70 கோடி பங்கை கொடுத்தது யார்? பரபரப்பு தகவல்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொச்சி, புனே அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டன. இதில் கொச்சி அணியை “ரெண்டஸ்வஸ்” என்ற நிறுவனம் ரூ.1,533 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த அணியில் யார்- யார்? பங்கு தாரர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளியே சொல்ல வேண்டாம் என்று ஐ.பி.எல். தலைவர் லலித் மோடியிடம் மத்திய மந்திரி சசிதரூர் வற்புறுத்தியதாக லலித் மோடி தெரிவித்தார்.

சசிதரூர் தனது மந்திரி அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் காஷ்மீரை சேர்ந்த சுனந்தா என்ற பெண்ணும் பங்குதாரராக இருப்பதாகவும் அவருக்கு ரூ.70 கோடி மதிப்புள்ள 18 சதவீத பங்குகள் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

சுனந்தா, சசிதரூர் காதலி என்றும் காதலிக்காகவே சசிதரூர் தலையிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டன. எனவே இந்த பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது. சசிதரூருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

ரெண்டஸ்வஸ் நிறுவனம் ஏலம் எடுத்த போது அதில் சுனந்தா பங்குதாரர் என்று குறிப்பிட வில்லை. ஏலம் எடுத்த பிறகு அதில் பங்கு தாரராக இருந்த ஒருவர் தனது ரூ.70 கோடி பங்கை சுனந்தாவுக்கு மாற்று கொடுத்துள்ளார்.

அவர் ஏன் தனது பங்கை சுனந்தாவுக்கு மாற்றி கொடுத்தார்? பங்கை மாற்றி கொடுத்தவர் யார்? என்பது மர்மமாக உள்ளது.

சசிதரூருக்காக அவரது காதலிக்கு பங்கு மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது ரெண்டஸ்வஸ் நிறுவனத்துக்கு சசிதரூர் சாதகமாக நடந்து கொண்டதற்காக கொடுக்கப்பட்ட பரிசாக இருக்கலாம். சசிதரூர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்த பங்கை காதலிக்கு கொடுக்க வைத்துள்ளார். எனவே இதில் ஊழல் நடந்து இருக்கிறது என்று ஒரு தரப்பினர் புகார் கூறுகின்றனர்.

ஆனால் சசிதரூர் நான் அதிகாரத்தை தவறாக பயன் படுத்தவில்லை. கொச்சி அணியை ஏலம் எடுத்த நிறுவனத்தின் பங்கு தாரர்கள் பலரை எனக்கு தெரியும். அதில் சுனந்தாவையும் தெரியும் என்கிறார்.

ரூ.70 கோடி பங்கு சுனந்தாவுக்கு ஏன் கைமாறியது என்பது பற்றி மட்டும் சரியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சுனந்தா காஷ்மீர் பெண். துபாயில் தங்கியிருந்து பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். கேரளாவுடன் எந்த தொடர்பும் கிடையாது.

இப்படி இருக்க கொச்சி அணியை ஏலம் எடுத்த ரெண்டஸ்வஸ் நிறுவனத்துடன் அவருக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை. எனவே கேரளகாரரான சசிதரூரின் பினாமியாக அவர் செயல்பட்டு இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

எனவே இது பற்றி ரெண்டஸ்வஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் யார்-யார்? கொச்சி அணியை ஏலம் எடுத்த பிறகு அதன் பங்குகள் யார்-யாருக்கு மாற்றப்பட்டது என்பது முழுமையாக தெரிந்தால் தான் சசிதரூர் தவறு செய்தாரா? என்பது முழுமையாக தெரியவரும்.

ஸ்டான்டர்டு சாட்டர்டு பாங்கி மூத்த அதிகாரி ஒருவரின் மனைவி கவுன்சிங்கான் என்பவரும் கொச்சி அணியை ஏலம் எடுத்த பங்குதாரர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே இந்த பாங்கியும் ஏலம் எடுதததில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


இதற்கு இடையே சோடா ஷகில் ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்திருப்பதால் அவருக்கு பாதுகாப்பு நடவடிகைகள் தரப்பட்டுள்ளன.மொத்தத்தில் கிரிக்கெட்டை வைத்து இவர்கள் சூது ஆடுவது பட்டவர்த்தனமாக தெரிகிறது.குதிரை மீது சூது ஆடுவது போல்தான்.எல்லோரும் எதிர்பார்க்கும் குதிரை வராது.ஒரு நொண்டி குதிரை ஜெய்க்கும்.ஜெய்க்கும் என்று நம்பி சென்னையில் பணம் கட்டியவர்கள் தலையில் துண்டு போட்டு கொள்ள ஜாக்கியுடன் கை குல்லுக்கி கொண்டு வெளி ஊரில் நொண்டி குதிரை மீது கோடி கண்ணக்கில் பணம் கட்டி ஜெயிப்பார் நல்ல குதிரையின் முதலாளி.

- நெருப்பன்.


- நெருப்பன் .

No comments:

Post a Comment