Wednesday, April 14, 2010

இந்தியாவில் விளையும் மிளகாயை விடபிரிட்டன் மிளகாய் காரம் அதிகம்


இந்தியாவில் விளையும், 'பூட் ஜொலாக்கியா' ரக மிளகாயை, ராணுவத்தினர் கையெறி குண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்துவதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ஆனால், இந்த ரக மிளகாயை விட, பிரிட்டனில் விளையும், 'இன்பினிட்டி' வகை மிளகாய் அதிகம் காரம் நிறைந்தது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார்விக் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வு தகவல்:பிரிட்டனின் லிங்கன்ஷைர் பகுதியில் விளையும் மிளகாய் ரகத்திற்கு, 'இன்பினிட்டி' என்று பெயர். பிரிட்டனின் முக்கிய சந்தை நகரங்களான, லிங்கன்ஷைர் மற்றும் கிரான்ட்ஹாம் பகுதிகளில் கிடைக்கும் மிளகாய், இந்தியாவில் விளையும், அதிக காரம் நிறைந்த, 'பூட் ஜொலாக்கியாவை' விட காரமானது.

மிளகாயின் காரத்தன்மையை அளவிட பயன்படும், 'ஸ்கோவில்லி ஸ்கேல்' மதிப்பீட்டில், 'இன்பினிட்டி' ரக மிளகாய்க்கு, 10 லட்சத்து 67 ஆயிரம் புள்ளிகளும், இந்தியாவின், 'பூட் ஜொலாக்கியா' ரக மிளகாய்க்கு 10 லட்சத்து 40 ஆயிரம் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த, 'இன்பினிட்டி' வகை மிளகாயை புதிதாக சாப்பிடும் ஒருவருக்கு, வாய்ப்புண் மற்றும் எரிச்சல் ஏற்படும்.

கிரான்ட்ஹாம் பகுதியைச் சேர்ந்த குரோவர் உட்டி உட்ஸ்(37) என்பவர் கூறுகையில், 'இன்பினிட்டி' ரக மிளகாயை சாப்பிடுவது, எரியும் நெருப்பை சாப்பிடுவது போன்றது. இத்தகைய காரத்தன்மை நிறைந்த மிளகாய் ரகம், எங்கள் பகுதியில் நிலவும் பருவ நிலையில் விளைகிறது என்பதை நம்ப முடியவில்லை' என்றார்.

- மதுமிதா .

No comments:

Post a Comment