Thursday, April 1, 2010

குஷ்புவின் ஆணவ பேச்சு ?


இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார். குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்," இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், "என்று கூறியுள்ளார்.

2 comments:

  1. குஸ்பூ பேச்சு சரி இல்லை. நல்ல குடும்ப பெண்களின் மனதை வேதனை படுத்தும் செயல். உன் மகள்கள் உனக்கு சரியான பாடம் புகட்டுவர். இது மாதிரியான கள்ள உறவுகளால் எதனை குடும்பங்கள் சீர் கேட்டு உள்ளது. நீ கூறும் இந்த கருத்து மேலும் சீர் அழியும். உனக்கு ரெண்டு மகள்கள் உள்ளனர். அவர்களை இம்மாதிரி வளர்ப்பாயா. நீதிபதிகள் வீட்டில் பெண்கள் இல்லை என்று நினைக்கிறேன். குஸ்பூ இனி உன் கருத்து எடுபடாது. உன் தோழிகள் பாதி பேரு விவாகரத்து ஆனவர்கள். உன்னை மாதிரி சினிமா காரிகளை பார்த்துதான் இந்திய பெண்கள் கேட்டு போகிறார்கள்.இதற்கு குர்ஆனில் என்ன தண்டனை உண்டோ அது உனக்கு கிட்டைக்கு,இறைவன் மிக பெரியவன் அதை மறந்து விடாதே.

    ReplyDelete
  2. ஜட்ஜ் கொடுத்த தீர்ப்பை வைத்து கொண்டு ஆடாதே.இறைவன் மிக பெரிய தண்டனையை கொடுப்பான்.நீயெல்லாம் பெண்ணை?இந்துவை திருமணம் செய்து கொண்ட திமிரில் பேசுகிறாயா.நீ அரேபியாவில் இப்படி பேசியிருந்தால் அறுத்திருப்பார்கள்.

    ReplyDelete