Wednesday, April 7, 2010

ரஞ்சிதா என்ன மாயம் செய்தாரோ


நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற டெலிவிஷனில் வெளியான வீடியோ பட காட்சிகளில் அதிர்ச்சியான மணிரத்னம் தனது “ராவணன்” படத்தில் இருந்து அவரை நீக்கினார்.

ராவணன் படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. விக்ரம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர். பிரியா மணியும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.

இந்த படத்தில் சிறு கேரக்டரிலாவது நடித்து விடவேண்டும் என பெரிய நடிகர்-நடிகைகளெல்லாம் விரும்பினர். ரஞ்சிதாவுக்கு சான்ஸ் கிடைத்தது. விக்ரமின் முறைப்பெண் வேடத்துக்கு தேர்வானார். அவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. மேலும் சில சீன்களில் நடிக்க வேண்டி இருந்தது.

இந்த நிலையில் நித்யானந்தாவுடனான “ஆபாச வீடியோ படம்” அவரை விலக்க வைத்தது. ரஞ்சிதா நடித்த காட்சிகளும் நீக்கப்பட்டன. அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்தன.

இதனால் மனம் உடைந்தார் ரஞ்சிதா. மணிரத்னத்தை தொடர்பு கொண்டு தன்னை நீக்க வேண்டாம் என்று வற்புறுத்தினார். வீடியோ பட விவரங்கள் பற்றியும் விளக்கி கூறினார்.

இதையடுத்து இருவரும் சமரசம் ஆகி உள்ளனர்.

ரஞ்சிதாவை மீண்டும் நடிக்க வைக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளார். விரைவில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

பின் ரஞ்சிதா என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை மணிரத்தினம் தொடர்ந்து ரஞ்சிதாவை நடிக்க வைக்க சம்மதம் தெரிவித்து விட்டார்.இது ஒரு சீப் பப்ளிசிட்டி என்கிறார் இன்னொரு இயக்குனர்.

- நெருப்பன்

No comments:

Post a Comment