Friday, April 9, 2010
சட்டம், ஒழுங்கு சீர்குலைவு:மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
''தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட் டதற்கு, போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கொலைச்சம்பவம் சிறந்த உதாரணம்,'' என மார்க்சிஸ்ட் மத்தியகுழு உறுப்பினர் வரதராஜன் பேசினார்.விலைவாசி உயர்வை கண்டித்து, மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூ., அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வரதராஜன் " விலைவாசி உயர்வு, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை கண்டித்து, மாநிலம் முழுவதும் 25 லட்சம் பேர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் கம்பெனிகளுக்கு ஆதரவாக, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன.
குறிப்பிட்ட சிலரை திருப்திபடுத்தும் வகையில், பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்த பரிசீலித்து வருகிறது. 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, உர மானியத்தை நிறுத்தி வைத்துள்ளது.தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. வடமதுரை போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் கொலையான சம்பவமே இதற்கு உதாரணம். கோடிக்கணக் கான ரூபாய் மதிப்பிலான போலி, காலாவதியான மருந்துகள் விற்பனை இன்னமும் நீடிக்கிறது. இப்பிரச்னையில் உண்மையான குற்றவாளிகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. இதற்கு துணையாக செயல் பட்டவர்கள் மீது மாநில அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment