
மத்திய மந்திரி சசிதரூர் காஷ்மீரை சேர்ந்த சுனந்தா என்ற பெண்ணை காதலிப்ப தாகவும் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
சசிதரூர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கொண்டவர். அதேபோல சுனந்தாவும் 2 முறை திருமணம் செய்துள்ளார்.
சுனந்தாவின் சொந்த ஊர் காஷ்மீர் மாநிலம் சோபூர் மாவட்டத்தில் உள்ள போனம். காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரது தந்தை புஷ்சர் நாத்தாஸ் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றியவர். சுனந்தா சகோதரர்கள் இப்போதும் ராணுவ அதிகாரிகளாக உள்ளனர்.
அவர்கள் சொந்த ஊரில் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகமானதை அடுத்து சுனந்தா குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறி காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் குடியேறினார்கள்.
சுனந்தா ஆரம்பத்தில் பாரமுல்லாவில் உள்ள ராணுவ பள்ளியில் படித்தார். அவரது குடும்பம் ஜம்முவுக்கு வந்த பிறகு அங்குள்ள கான்வென்ட் பள்ளியில் படித்தார். அடுத்து கல்லூரி படிப்பை முடித்தார்.
படிப்பு முடிந்ததும் ஸ்ரீநகர் இந்திய சுற்றுலாத்துறை மையத்தில் வரவேற்பாளராக வேலை பார்த்தார். அப்போது காஷ்மீரை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய் தார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
பின்னர் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் சாலை விபத்தில் இறந்து போனார்.
அதன் பிறகு அவர் திருமணம் செய்யவில்லை. இப்போது மத்திய மந்திரி சசிதரூரை காதலித்து வருவ தாக கூறப்படுகிறது. சுனந்தா வுக்கு வாலிப வயதில் ஒரு மகன் இருக்கிறார். தற்போது சுனந்தா துபாயில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். முன்னதாக அழகு கலை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் தான் ஐ.பி.எல். கொச்சி அணியின் ரூ.70 கோடி பங்கு அவருக்கு கிடைத்து உள்ளது. அதை எப்படி பெற்றார்? அவரே நேரடி முதலீடு செய்து வாங்கினாரா? சசிதரூரின் பினாமி பங்கா? என்பது மர்மமாக உள்ளது.
- மதுமிதா .
No comments:
Post a Comment