
முல்லைத் தீவில் இலங்கை ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் புகைப்பட ஆல்பம் மற்றும்முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இலங்கையில் விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்ட பின், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத் தீவு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
முல்லைத்தீவில், அம்பலவான் பொக்கனை என்ற இடத்தில்நடந்த தேடுதல் வேட்டையின் போது, மறைவிடம் ஒன்றில், விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம், புலிகள் அமைப்பு தொடர் பான முக்கிய ஆவணங்கள் மற்றும் நான்கு வீடியோ காசெட்டுகளை ராணுவத்தினர் கண்டு பிடித்தனர்.இதுதவிர, புலிகள் மறைத்து வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே, சிங்கள மற்றும் தமிழ்ப் புத் தாண்டு கொண்டாட் டங்களை முன்னிட்டு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதிகளில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு, ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
- Tamilnilavan
No comments:
Post a Comment