Friday, April 16, 2010
வீடியோ ஆதாரம் ரஞ்சிதாவை, நித்யானந்தா பலாத்காரம் செய்யவில்லை; கர்நாடக ஐகோர்ட்டில் சி.ஐ.டி. போலீஸ் தகவல்
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தியானபீடத்தின் தலைவரும் பிரபல சாமியாருமான நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் சாமியார் மீது மோசடி புகாரும் கூறப்பட்டது. சாமியார் பற்றிய சி.டி.க்களை அவரது முன்னாள் சீடர் லெனின் வெளியிட்டு அம்பலத் படுத்தினார்.
இது பற்றிய வழக்கு விவரங்கள் அனைத்தும் கர்நாடக போலீசில் ஒப்படைக்கப்பட்டது. சி.ஐ.டி.போலீஸ் சூப்பிரண்டு கே.என்.யோகப்பா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கில் சி.ஐ.டி. சூப்பிரண்டு யோகப்பா ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் சுவாமி நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற சி.டி. ஆதாரத்தை பார்க்கும் போது நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவை பலாத்காரம் செய்ய வில்லை. சி.டி.யில் நடிகையின் முகம் சரியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
முன்னதாக கர்நாடக ஐகோர்ட்டில் அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் சாமியார் நித்யானந்தா கற்பழிப்பு, முறையற்ற உறவு, மோசடி ஆகியவற்றுக்கு சி.டி. ஆதாரமே போதுமானது என்றும், மதநம்பிக்கையை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
கற்பழிப்பு புகார் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுத்து இருக்கிறார்களா? என்று ஐகோர்ட்டு கேள்வி விடுத்து இருந்தது. ஆனால் அந்த மாதிரியாரும் புகார் கொடுக்கவில்லை என்று தெரிவித்தது. ஆனால் சாமியாருக்கு எதிரான சி.டி.ஆதாரமே போதுமானது என்றது.
மேலும் நித்யானந்தாவின் முன்னாள் பக்தர் நாராயணா சாமியாரிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்ததாகவும் சாமியார் அதை மோசடி செய்து விட்டார் என்றும் புகார் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கர்நாடகத்தில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு உகந்தது அல்ல. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அளிநாகராஜ் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த மனு மீதான விசாரணையையும் வருகிற 21-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment