
இங்கிலாந்தை சேர்ந்தவர் லூசி (24). இவர் துபாயில் உள்ள ஒரு அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டுக்கு செல்ல வாகனத்துக்காக ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சயீத் (30) என்ற அரேபிய வாலிபர் காரில் வந்தார். அவர் லூசியை ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு தனது நண்பர்களுடன் மது குடித்தார். பின்னர் புறநகர் பகுதிக்கு கடத்தி சென்று அவரை தாக்கினார். இதைத்தொடர்ந்து தனது வீட்டுக்கு கொண்டு வந்து கற்பழித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் லூசிதான் தன்னுடன் விரும்பி உல்லாசமாக இருந்ததாக கூறினார். அது உண்மை என்று நம்பிய
போலீசார் லூசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அங்கு அவர் இதைவிட பெரிய கொடுமையை அனுபவித்ததாக கூறப்படுகிறது. சிறையில் அவரை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பல ஆண்களுடன் “செக்ஸ்” உறவுக்கு கட்டாயப் படுத்தப்பட்டார்.
இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட லூசி நீதிபதி முன்பு நடந்த கொடுமைகளை விளக்கினார். இந்த கொடுமையில் இருந்து தன்னை காப்பாற்றும்படி நீதிபதியிம் மன்றாடினார்.
அவர் சொல்வது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? என்பதை ஆராய தீவிர விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment