
ஐஸ்வர்யாராய் நடிக்கும் படங்கள் கோடிக்கணக்கில் விலை போகின்றன. இதனால் அவரது படங்களை, பணத்தை தண்ணீராய் செலவிட்டு எடுக்கிறார்கள். அக்ஷய்குமார் ஜோடியாக ஆக்ஷன் ரீப்ளே என்ற இந்தி படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். இந்த படத்தை பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் விபுல் ஷா தயாரிக்கிறார். இதில் ஒரு பாடல் காட்சியில் ஐஸ்வர்யாராய் 125 உடைகளை அணிந்து ஆடியுள்ளார். இந்த பாடல் காட்சியை பல நாட்கள் எடுத்துள்ளனர். இந்திய திரைப்பட வரலாற்றில் இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு ஆடைகளை ஒரு பாடல் காட்சிக்கு அணியவில்லை. இது சாதனையாக கருதப்படுகிறது. இது பற்றி விபுல் ஷா கூறும்போது, கதைக்கு தேவை என்பதால் ஒரு பாடலில் ஐஸ்வர்யாராய் 125 ஆடைகளை அணிந்து ஆடினார். இது திரைப்பட வரலாற்றில் சாதனை என்றார்.
No comments:
Post a Comment