Thursday, April 8, 2010
மணிரத்தினத்தின் கொழுப்பு ?
ராமாயண கதையை கருவாக வைத்து புதுப்படம் இயக்கியுள்ளார் மணிரத்னம். இப்படம் தமிழில் “அசோகவனம்” என்ற பெயரிலும் இந்தியில் “ராவணன்” என்ற பெயரிலும் தயாராகியுள்ளது.
தமிழ் பணீடத்தில் ராமன் கேரக்டரில் விக்ரமும், ராவணனாக அபிஷேக்பச்சனும் நடித்துள்ளனர். இந்தியில் ராமனாக அபிஷேக்கும் ராவணனாக விக்ரமும் வருகிறார்கள். சீதை பாத்திரத்தில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளார்.
கேரளா, டெல்லி, சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. கதை மற்றும் கதாபாத்திரங்களின் தன்மை, காஸ்ட்யூம் போன்றவைகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் கூட ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுப் பகுதிகளில்தான் நடந்துள்ளது.
இதன் கிளைமாக்ஸ் பற்றி பலவிதமான யூகங்கள் கிளம்பியுள்ளன. 4 விதமான கிளைமாக்ஸ்சை எடுத்து வைத்திருப்பதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவிக்கின்றனர். அதில் ஒரு கிளைமாக்ஸ் சர்ச்சையை ஏற்படுத்தும்படி உள்ளதாம்.
ராவணனை யுத்தத்தில் வென்று அவனால் கடத்தி சிறை வைக்கப்பட்ட சீதையை ராமன் மீட்டு வருவதுதான் ராமாயண கதையின் கிளைமாக்ஸ். ஆனால் இதை மணிரத்னம் மாற்றியுள்ளாராம். சீதையின் மனதை ராவணன் வெல்வது போல கிளைமாக்ஸ் காட்சியொன்றை உருவாக்கியுள்ளாராம். மேலும் ராமனுடன் சீதை சேர்வது போலவும் ராமன் அல்லது ராவணன் இரு கேரக்டரில் ஒருவர் கதை முடிவது போலவும் மேலும் சில கிளைமாக்ஸ்களையும் உருவாக்கி வைத்துள்ளார்.
இதில் எந்த கிளைமாக்ஸ் படத்தில் இடம்பெறும் என்பது படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கே புரியாத புதிராக உள்ளது. எல்லா கிளைமாக்ஸ்களையும் படத்தோடு சேர்த்து நெருக்கமானவர்களுக்கு போட்டு காட்டுவதாகவும் மெஜாரிட்டியினரின் கருத்தின்படி கிளைமாக்ஸ் காட்சியை மணிரத்னம் சேர்ப்பார் என்றும் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment