Thursday, April 8, 2010

ரம்பாவுக்கு இன்று நிஜ முதல் இரவு


நடிகை ரம்பா - தொழிலதிபர் இந்திரன் திருமணம் திருப்பதியில் இன்று கோலாகலமாக நடந்தது. உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த நடிகை ரம்பாவுக்கும், கனடா நாட்டை சேர்ந்த தொழிலதிபர் இந்திரனுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தனக்கு திருமணம் கைகூடினால் திருப்பதியில் வைத்து திருமணத்தை நடத்துவதாக ரம்பா, ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டிருந்தாராம். அதன்படி ரம்பா - இந்திரன் திருமணம் திருப்பதியில் இன்று (8தேதி) நடந்‌தது. ரம்பா காலை 11 மணியளவில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநிற பட்டுப்புடவை கட்டியபடி மணமேடைக்கு வந்தார். மணமகன் பட்டு வேஷ்டி - சட்டை அணிந்து மணமேடையில் இருந்தார். மதியம் 12.30 மணியளவில் ரம்பா கழுத்தில் இந்திரன் தாலி கட்டினார்.

‌கோலாகலமாக இதில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நடிகை ரோஜா, டைரக்டர் செல்வமணி, கலா மாஸ்டர், தெலுங்கு டைரக்டர் ராகவேந்திர ராவ் உள்ளிட்‌டோர் பங்கேற்றனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. திருமணம் முடிந்த கையோடு பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்ட ரம்பா, பின்னர் ஏழுமலையானை தரிசித்தார்.

நடிகை ரம்பா - இந்திரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வருகிற 11ம்தேதி நடைபெறுகிறது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

No comments:

Post a Comment