Wednesday, April 7, 2010
நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு கோர்ட்டு கைது வாரண்டு
இந்தி கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்து உள்ளது. மல்லிகா ஷெராவத் ஆபாசமாக நடிப்பதாக ரஜனிகந்த் போர்லே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் கவர்ச்சியாக நடித்த படங்கள் அடங்கிய சி.டி.க்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இது சம்பந்தமான வழக்கு விசாரணை மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பந்தர்கடா கோர்ட்டில் நடந்து வந்தது. கோர்ட்டில் ஆஜராகும்படி பல தடவை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் சார்பில் ஆஜரான வக்கீல் அவகாசம் கேட்டார். அது முடிந்த பிறகும் ஆஜ ராகவில்லை.
இதையடுத்து அவரை கைது செய்யும்படி ரஜனிகந்த் போர்லே கோர்ட்டில் வற்புறுத்தினார். இதை ஏற்று மல்லிகா ஷெராவத்துக்கு மாஜிஸ்திரேட்டு ரூ. 15 ஆயிரம் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடி வாரண்டு பிறப்பித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment