Thursday, April 1, 2010

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், துபாயில் நாளை புதிய கட்சியை துவக்க உள்ளார்.பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்து, பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ஆட்சியை ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து அந்நாட்டின் அதிபரானவர் முஷாரப்.பெனசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்து கடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றன.

இந்த கட்சிகளின் வற்புறுத்தலின் பேரில், 2008ம் ஆண்டு முஷாரப் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.'பாகிஸ்தானில் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்து அவரை வீட்டு சிறையில் அடைத்து, அவசர நிலை பிறப்பித்தது அரசியலமைப்புக்கு எதிரானது' எனக்கூறி, முஷாரப் மீது சுப்ரீம் கோர்ட் குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து முஷாரப் மீது நாட்டின் பல்வேறு கோர்ட்டுகளில்வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சுற்று பயணம் சென்ற முஷாரப் மீண்டும் நாடு திரும்பவில்லை. நாடு திரும்பினால் இவர் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது.இந்நிலையில் முஷாரப், 'அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' என்ற பெயரில் கட்சியை துவக்க உள்ளார். தற்போது துபாயில் தங்கியுள்ள முஷாரப், நாளை தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் முறைப்படி தனது கட்சியை துவக்க உள்ளார்.

தனது ஆதரவாளர்களான முன்னாள் உள்துறை அமைச்சர் பைசல் சலே ஹயாத், முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் முகமது அலி துரானி உள்ளிட்ட பலருக்கு முஷாரப்பின் வக்கீல் முகமது அலி சயீப், அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளார்.

முன்னதாக சயீப், புதிய கட்சியை முஷாரப் துவக்குவதற்கு ஏற்ப, பாகிஸ்தான் தேர்தல் கமிஷனில், 'அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' கட்சியின் பெயரை பதிவு செய்ய விண்ணப்பம் செய்துள்ளார். இந்த கட்சியின் நிர்வாகிகள் பட்டியலில் முஷாரப்பின் ஆதரவாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.அதிபர் முஷாரப் அதிபராக இருந்த போது பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(க்யூ) கட்சி இவரது ஆதரவு பெற்ற கட்சியாக இருந்தது.

தற்போது இந்த கட்சியில் அதிருப்தியாளர்கள் அதிகரித்து தனி கட்சி துவக்கியுள்ளனர். முஷாரப் துவக்க உள்ள புதிய கட்சியில் இவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று சேர்வார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது. முஷாரப்புக்குநெருக்கமானநபர் குறிப்பிடுகையில், 'முஷாரப் வரும் நவம்பரில் தீவிர அரசியலில் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்' என்றார்.

No comments:

Post a Comment