Thursday, April 1, 2010

சீனா வாலாட்டினால் நறுக்கிடுவோம்

பெரும் சவால்களை சமாளித்து பல்வேறு முன்னேற்றங்களை செயல்படுத்தும் தருணத்தில் இருக்கிறோம் என்று புதிதாக பொறுப்பேற்ற இந்திய ராணுவ தலைமை தளபதி வி. கே., சிங் அளித்துள்ள முதல் பேட்டியில் கூறியுள்ளார். இவர் மேலும் கூறுகையில் சீனாவிடம் இருந்து எந்தவொரு மிரட்டல் வந்தாலும் அதனை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது என புது தெம்புடன் பேட்டி அளித்தார். தீபக் கபூர் ஒய்வு பெற்றதை அடுத்து புதிய தளபதியாக ராணுவ அலுவலகத்தில் இன்று முதல் பொறுப்பேற்று பணியை துவக்கினார். இன்று நிருபர்கள் சூழ்ந்து கொண்டு பேட்டி கண்டனர்.

அப்போது தளபதி கூறியதாவது; நமது ராணுவத்தின் உள்கட்டமைப்பு ஆரோக்கியம் பேணிக்காத்திட முக்கியத்துவம் அளிப்பேன். இது சரியாக இருந்தால் தான் நாம் வெளியில் இருந்து வரும் அச்சுறுதல்களை சமாளிக்க முடியும். ராணுவ துறையில் ஊழல்கள் இல்லாதவாறு முழுக்கவனம் செலுத்துவேன். ராணுவ துறைக்கு நடப்பு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவைப்படும் ஆயுதங்கள் வாங்கப்பட்டு மேலும் நவீனப்படுத்தப்படும். இந்தியா பலவித சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறது. நமது ராணுவம் எதையும் சமாளிக்கும். சீனா மற்றும் வெளி நாட்டு அச்சுறுதல்கள் எதுவாக இருந்தாலும் அதனை சந்திக்க தயார். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக வி. கே., சிங் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

புதிய தளபதியின் பணிக்கால வரலாறு : ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள வீ. கே., சிங் ராணுவ கிழக்கு பிராந்தியத்தில் ராணுவ தலைமை பொறுப்பு வகித்தவர். இலங்கை போர் நடந்த நேரத்தில் சென்ற அமைதிப்படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர். மேற்குவங்ம் டார்ஜீலிங்கில் ராணுவ நிலம் முறைகேடாக விற்கப்பட்டது தொடர்பாக அவுதேஸ் பிரகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்தவர் உத்தரவிட்டவர் வி. கே., சிங் . நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பேர்போன வி. கே., சிங் பதவி ஏற்றதில் ராணுவ துறையில் அதிகாரிகள் சற்று கூடுதலாகவே நிமிர்ந்து நிற்கிறார்களாம்.

No comments:

Post a Comment