Tuesday, May 4, 2010

பிரான்ஸ் நாட்டில் குறும்படத்திற்கு வெற்றி பெற்ற இந்திய மாணவன்


சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் வருடம் தோறும் நடைபெறும் மாணவர்களுக்கான குறும்பட போட்டி நடைபெற்றது .அமரர் எல்.வீ.பிரசாத் திரைப்பட கல்லூரி மாணவர் திரு .ரோஹின் நேரிடையாக சென்று போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

சுமார் முப்பது நாடுகளில் இருந்து வந்து கலந்து கொண்ட மாணவர்களில் முதல் பரிசை ஜெர்மனி நாட்டை சேர்ந்த மாணவன் தனது ' HELL RIDER' என்கிற படத்திற்கு பெற்றிருக்கிறான்.அதற்க்கு அவார்டும் பரிசு தொகை ரூபாய் 2 ,300 யூரோவும் கிடைத்துள்ளது.

தமிழில் இருந்து இரண்டு படங்கள் சென்றன .ஓன்று மகேஷ் ரெட்டி இயக்கிய போஸ்ட் மேன். இன்னொன்று ரோஹின் இயக்கிய ' நண்பா ' .இது மாணவர்கள் இடையே ஒற்றுமையை தூண்டும் விதமாக உள்ளது.ஒன்பது நிமிடமே கொண்ட இந்த குறும் படத்தில் ரோஹின் காட்சி அமைப்புகளை அருமையாக அமைத்துள்ளார்.இவருக்கு இரண்டாவது பரிசுக்கான விருதும் ரூபாய் 1 ,500 யூரோவும் கிடைத்துள்ளன.

" எனது நோக்கம் பெரிய அளவில் நல்ல சினிமாவை கொடுக்க வேண்டும் என்பது தான்.நான் படித்த எல்.வீ.பிரசாத் பிலிம் அண்ட் டி வீ அகாடாமிக்கு என்னால் முடிந்த பெருமையை தேடி தர வேண்டும் " என்னும் 21 வயது ரோஹினின் 'தாயும் தந்தையும் அதிக ஊக்கம் கொடுத்தார்கள்' என்கிறார் தொடர்ந்து.

- மதுமிதா

No comments:

Post a Comment