Saturday, May 22, 2010

விபத்தில் இந்திய விமானம் எரிந்தது; 160 பேர் பலி; துபாயில் இருந்து வந்தபோது பயங்கரம்?


துபாயிலிருந்து மங்களூரூ வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கு‌ம்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது. உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் விமானத்தில் இருந்த 160 பயணிகள் எரிந்து சாம்பலாயினர். 6 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். 6 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலு்ம் கேரளா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கோர விபத்து நடந்த இடத்திற்கு 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து குறித்து விமான துறை அதிகாரிகள் உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விமான விபத்து நடந்தது எப்படி ? : . ஏர் இந்திய விமானம் ( எக்ஸ்1 892 ) விபத்தில் சிக்கியுள்ளது. காலை 6 .30 மணியளவில் மங்களூருவில் இறங்கும்போது வானிலை மோசமாக இருந்துள்ளதுபோதிய வெளிச்சம் கிடைக்காதததால் வழி தெரியாமல் போகவே விமானஓட்டிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை , விமானம் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லைவிமானம் நிலைதடுமாறியது. தொடர்ந்து விமானம் தூக்கி வீசப்பட்டது. இதில் தீ பிடித்து எரிந்தது. இதில் இருந்த பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் அலறல் சப்தம் மட்டுமே போட முடிந்தது. சில நொடிப்பொழுதில் 160 உயிர்களையும் தீச்சுவாலை விழுங்கி கொண்டது.

விமானம் இறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஓடுதளத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனால் சிதறியபடி உயிருக்கு போராடும் பயணிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. 19 பேர் குழந்தைகள் என தெரிகிறது. இறந்தவர்கள் குறித்து முழுமையான விவரம் கிடைக்கவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்து விடும் என்றார் விமான துறை இயக்குனர் எஸ். என்.ஏ., சைதீ.

பெரும் சப்தம் கேட்டது ; உயிர் பிழைத்தவர் பேட்டி : இந்த விபத்தில் தப்பிய அப்துல்புத்தூர் கூறுகையில் ; விமானம் விழுவதற்கு முன்னாள் நான் குதித்தேன். விமானம் விழும் போது பெரும் சப்தம் கேட்டது. முன்னதாக டயர் வெடித்து சப்தம் காதை பிளந்தது. கையில் இருவரை இழுத்து கொண்டு கீழே விழுந்தேன் என்றார். எல்லாம் இரண்டு நொடிப்பொழுதில் நடந்து முடிந்தது. நாங்கள் உயிர் பிழைப்பேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை என்றார். இவர் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரதமர் விசாரித்தார்: மங்களூரு விமானம் விபத்து குறித்து பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சருடன் நடந்த விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் கவலையும், இரங்கலும் தெரிவித்துள்ளார். காங்., தலைவர் சோனியாவும் கவலை தெரிவித்துள்ளார். இந்த விமான விபத்தை அடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனை விருந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காங்., கட்சி அறிவித்துள்ளது.

விமானதுறை அமைச்சர் விரைகிறார்: விமான துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைகிறார். அங்கு நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை கவனிக்கிறார். இத்துடன் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, வெளியுறவுதுறை அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணா ஆகியோரும் விரைந்துள்ளனர்.

விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் யார் ? : அப்துல்லா, சப்ரீனா, ஒமர் பரூக், ராய் ஜோயல், கிருஷ்ணா, பிரதீப், முகமது, பிரதாப் டிசோசா ஆகிய 8பேர் உயிர் பிழைத்துள்ளனர். உயிர் பிழைத்த அப்துல்லா தப்பி ஓடும்போது கையில் சிலரை இழுத்துகொண்டு ஓடியபடி காப்பாற்றியுள்ளார். கர்நாடக மாநில எம்.எல்.ஏ., ஒருவரும் சிக்கி இறந்துள்ளார். பெங்களூர் சாந்திநகர் தொகுதியை சேர்ந்த ஹாரிஸ் என்பவரும் கருகி இறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மீட்பு பணியில் ராணுவ வீரர்கள்: விமானம் விபத்தில் சிக்கிய இடத்தில் சி.ஐ.எஸ்.எப்., படை வீரர்கள் 150 பேர்‌ அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பேரிடர் மீட்பு அவசரகால படையினரும் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த விமான விபத்துகள்: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் இன்று நடந்த விபத்து 100 க்கு மேற்பட்டோர் பலியான சம்பவம் ஆகும்., பீகார் மநிலம் பாட்னாவில் 2000 ம் ஆண்டில் ஜுலை மாதம் 17 ம் தேதி நடந்த விபத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர். சமீப கால விமான விபத்துகள் விவரம் வருமாறு :

1978 ம் ஆண்டில் ஜனவரி 1ம் தேதி ஏர் இந்திய விமானம் அரபிக்கடலில் விழுந்ததில் 213 பேர் கொல்லப்பட்னர்.

1982 ம்ஆண்டில் ஜூன் மாதம் 21 ம் தேதி ஏர் இந்திய விமானம் மும்பை விமான நிலயைத்தில் சிக்கியதில் 17 பேர் கொல்லப்பட்டனர். 94 பேர் உயிர் பிழைத்தனர்.

1988 ம்ஆண்டில் அக்டோபர் 19 ம் தேதி ஆமதாபாத்தில் 124 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் உயிர் பிழைத்தனர்.

1990 பி்ப்., மாதம் 14 ம் தேதி பெங்களூருவில் நடந்த விபத்தில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

1991 ம் ஆண்டில் இம்பாலில் 69 பேர் கொல்லப்பட்டனர்.

1993 ல் ஏப்ரல் மாதம் 26 ல் மகாராஷ்ட்டிராவில் அவுரங்காபாத்தில் 55 பேர் கொல்லப்பட்டனர்.

1996 ம் ஆண்டில் நவம்பர் 12 ம் தேதி அரியானாவில் 349 பேர் ‌கொல்லப்பட்டனர்.

2000 ம் ஆண்டில் ஜூலை 17ம் தேதி பாட்னாவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

லிபியா விமானம் விபத்தில் சிக்கியதில் 103 பேர் இறந்தனர். போலந்து நாட்டு அதிபர் சென்ற விமானம் வெடித்து சிதறியதில் பலியானார். ஏமனி விமானம் விபத்தில் 153 பேர் பலியாயினர். சமீபத்தில் யு.ஏ.இ விமானம் தடுமாறி பெரும் விபத்தில் இருந்து தப்பியது.

விபத்து குறித்து விசாரிக்க ‌ஹெல்ப் லைன் : விபத்து குறித்து விசாரிக்க விமான துறை ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளது. 011- 25656196 , மற்றும் 011- 25603101 ஆகும். இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பயணிகளின் உறவினர்கள் தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment