Thursday, May 6, 2010

3,000 டாலர் வரை வெளிநாட்டு கரன்சியை ரொக்கமாக எடுத்துச் செல்லலாம்


வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், 3,000 டாலர் வரை வெளிநாட்டு கரன்சியை ரொக்கமாக எடுத்துச் செல்லலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது இதற்கு முன்பு இருந்த 2,000 டாலரைவிட 50 சதவீதம் அதிகம். அங்கீகரிக்கப்பட்ட கரன்சி மாற்று நிறுவனங்கள், ஈராக், லிபியா, ஈரான், ரஷ்யா மற்றும் காமன்வெல்த் குடியரசு நாடுகள் தவிர மற்ற நாடுகளுக்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்கு 3,000 டாலர் வரை முன் அனுமதி ஏதுமின்றி வெளிநாட்டு கரன்சிகளை விற்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment