Saturday, May 8, 2010

சினிமாகாரர்களுக்கு ஆதராவாக மீண்டும் தீர்ப்பு ?


நடிகர் கமல்ஹாசன் மீதான வழக்கை முடித்து சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திரைப்பட உதவி இயக்குநராகப் பணியாற்றுபவர் செந்தில்குமார். இவர் "அர்த்தநாரி என்ற க்ளோனிங்' என்ற திரைக்கதையை எழுதி, அதை குறுந்தகட்டில் பதிவு செய்து கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடிகர் கமல்ஹாசனிடம் அளித்ததாகவும், இதற்கு ரூ. 25 லட்சம் வழங்கவும், உதவி இயக்குநர் வாய்ப்பு தருவதாகவும் உறுதி அளித்தாராம்.

ஆனால், இவரது திரைக்கதை அவரது அனுமதியில்லாமல் தசாவதாரம் என்ற பெயரில் தமிழ் திரைப்படமாக வெளியானதாம். இதற்காக இவருக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லையாம்.

இதையடுத்து இவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கை திரும்பப் பெறுமாறு கமல்ஹாசனுக்கு ஆதரவாக 10 பேர் கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி மிரட்டியதாக தாம்பரம் காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் கொடுத்தார்.

ஆனால், இதுகுறித்து போலீஸôர் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனால் இவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஆர். ரகுபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கு குறித்து தாம்பரம் போலீஸôர் புலன் விசாரணை செய்ததில், செந்தில்குமார் அளித்த புகார் அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாதது என்று அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்தார்.

- நெருப்பன்

No comments:

Post a Comment