Friday, May 14, 2010

கருணாநிதி மீது மானநஷ்ட வழக்கு: ஜெயலலிதா ?


சிறுதாவூர் நிலத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது நன்கு தெரிந் தும், தலித் மக்களுக்கான நிலங் களை ஜெயலலிதா அபகரித்து விட்டார் என கருணாநிதி, விஷம பிரசாரம் செய்து வருகிறார். அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்' என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:ஒரு பொய்யை தொடர்ந்து சொன்னால் உண்மையாகிவிடும் என்ற எண்ணத்தில், முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து, சிறுதாவூரில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நான் அபகரித்து வீடு கட்டிக் கொண்டதாக சட்டசபையிலும், வெளியேயும் கருணாநிதி, பொய் தகவல்களை பரப்பி வருகிறார். அண்மையில் கூட, சிறுதாவூரில் எனக்கு எந்த நிலமும் இல்லை என்று தெளிவுபடுத்திய விசாரணை கமிஷனர் அறிக் கையை வைத்துக் கொண்டே, கடந்த மாதம் நடந்த விருது வழங்கும் விழாவில், 'முதல்வராக இருந்த ஒருவர், சிறுதாவூரில் பஞ்சமர்களுக்கு என்று இருந்த நிலங்களை எல்லாம் அபகரித்து வீடு கட்டிக் கொண்டு, அங்கிருந்த தாழ்த்தப்பட்டோரை விரட்டி விட்டார்' என திட்டமிட்டே பொய்யை பேசியிருக்கிறார்.'சிறுதாவூர் நிலப்பிரச்னைக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. விசாரணை அறிக்கை வெளி வந்தால் உண்மை வெளிப்படும்' என நான் மே 13ம் தேதி அறிக்கை வெளியிட்ட பிறகு, கடந்த பிப்ரவரி 28ம் தேதி விசாரணை கமிஷன் அளித்த அறிக்கை, அவசர கதியில், நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையைக் கூட தமிழிலில் சமர்ப்பிக்காத கருணாநிதி, தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவது கேலிக்கூத்து.விசாரணை அறிக்கையில், சிறுதாவூர் நிலத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மை, நியாயம், தர்மத்திற்கு கிடைத்த வெற்றி. இதை நன்கு தெரிந்து வைத் துக் கொண்டு, 'தலித் மக்களுக் கான நிலங்களை ஜெயலலிதா அபகரித்து விட்டார்' என தொடர்ந்து என் மீது அவதூறு பரப்பி வந்த கருணாநிதி மீது, மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment