Saturday, May 8, 2010
அயர்லாந்து விமான நிலையங்கள் மூடப்பட்டன
கடந்த மாதம் ஐஸ்லாந்து நாட்டில் உள்ள பெரிய எரிமலை வெடித்து சிதறியது. அதில் இருந்து வெளியான எரிமலை குழம்பிலிருந்து உருவான சாம்பல் காற்றில் பரவியது. இதனால் ஐரோப்பிய நாடுகளின் விமான போக்குவரத்து தடைபட்டது.
இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐஸ்லாந்து நாட்டில் உள்ள மேலும் ஒரு எரிமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடித்தது. இதனால் மீண்டும் எரிமலை சாம்பல் அதிக அளவில் வெளியாகி காற்றில் பரவி வருகிறது.
வானில் சுமார் 35 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் பரவியுள்ளது. இதனால் விமானங்கள் பறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சாம்பல் ஐஸ்லாந்தின் பக்கத்து நாடான அயர்லாந்தில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, மேற்கு அயர்லாந்தில் உள்ள விமான நிலையங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.
இந்த சாம்பல் காரணமாக ஸ்பெயின் நாட்டில் சாண்டியாகோ, டி கம்போஸ்டெலா, லா கருணா ஆகிய 3 விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் அதிவேகமாக காற்றில் பரவுவதால் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment