Monday, May 3, 2010

இரவு 8 மணிக்கு மேல் திரையரங்குகளும், 7 மணிக்கு மேல் மார்க்கெட்டுகளும் இயங்கக்கூடாது

பாகிஸ்தானில் இரவு 8 மணிக்கு மேல் திரையரங்குகளும், 7 மணிக்கு மேல் மார்க்கெட்டுகளும் இயங்கக்கூடாது என, அரசு தடை விதித்துள்ளது.பாகிஸ்தானில் கடும் மின்பற்றாக்குறை நிலவுவதால், இரவு 8 மணிக்கு மேல் திரையரங்குகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல ஷாப்பிங் மால்கள், சந்தைகள் உள்ளிட்டவை இரவு 7 மணிக்கு மேல் இயங்கக் கூடாது என, அரசு தடை போட்டுள்ளது.பாகிஸ்தானில் மொத்தம் 1,300 தியேட்டர்கள் இருந்தன. தற்போது, 200 தியேட்டர்கள் தான் உள்ளன. சமீபத்தில் தான் இந்திய திரைப்படங்களை வினியோகிக்க உரிமை வழங்கப்பட்டிருந்தது. அந்நாட்டில் கடும் மின்சார பற்றாக்குறை நிலவுவதை யொட்டி இரவு 8 மணிக்கு மேல் திரையரங்கம் இயங்கக் கூடாது, ஜெனரேட்டரை இயக்கியும் திரைப்படங்களை காட்டக்கூடாது என, அரசு தடை விதித்துள்ளது.இதனால், திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அரசின் இந்த உத்தரவு சினிமா உலகத்துக்கு சாவு மணி அடிப்பதாக உள்ளது என, திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.அரசின் உத்தரவை பின்பற்றப்போவதில்லை என, மார்க்கெட் மற்றும் மால்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் தற்போது கடும் வெயில் காணப்படுகிறது. பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து மாலையில் தான் வெளியே வருகின்றனர். அந்த சமயத்தில் கடையை மூட சொல்வதை ஏற்க முடியாது என, வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment