Monday, June 28, 2010

Prince William had no money


Prince William of Wales was caught in an embarrassing situation when he had no money to pay for his shopping.

The prince, who is second in the line of succession to the British throne, turned to his girlfriend Kate Middleton for help but she had no money either.

The couple ended up paying for their £12.60 (RM61) worth of groceries with Middleton's platinum credit card.
A file photo of Prince William and Kate Middleton

A file photo of Prince William and Kate Middleton

Dressed casually and hidden behind steel-framed glasses, William and Middleton popped into a mini-market in the small town of Blaenau Ffestiniog, North Wales, on a Sunday night.

After a while, William took the basket containing two pizzas, a bag of chips, an iceberg lettuce, a bag of salad leaves, a bottle of orange juice and two bottles of water to the counter.

Immediately, he was recognised by shop assistant Sioned Compton, who excitedly exclaimed: "Oh my God! You're Prince William, aren't you?"

He just looked down at his feet and muttered: "No. No, I'm not."

Knowing that she had spoken 'out of turn', Compton did not press the issue and proceeded to put his shopping through the till.

Soon, the 28-year-old prince realised that he had no money and asked his girlfriend: "Can you pay, please? I've not got any cash."

But Middleton had none either, so she had to produce her credit card that confirmed William's identity.

"I couldn't believe it when he rocked up at our store. I noticed someone from his security team accompanied him and stood at the entrance.

"Wills was driving an Audi. There appeared to be no other passenger but there were two other cars – one in front and one behind – when he pulled away," said Compton.

She said she was disappointed that William did not admit that he is the prince.

"He must have had his reasons," she added.

Source: Mail Online, UK

Brazilian goalie suspected of beating girlfriend to death


Police say they'll question the goalie of Flamengo, one of Brazil's most popular soccer teams, in the disappearance and possible death of a 25-year-old woman said to be the mother of his child.

Police chief Alessandra Wilke in the central Brazilian town of Contagem told TV Globo that Flamengo club's Bruno is suspected along with two friends of having beaten Eliza Samudio, who has been missing for three weeks.

Wilke said Sunday that Samudio "probably died and they hid the body."

She also said that police believe Samudio to be the mother of a child from a relationship with the 25-year-old Bruno, whose full name is Bruno Fernandes de Sousa.

Michel Assef Filho is a lawyer for Bruno and for Rio-based Flamengo. He told Globo TV that the player insists he is innocent

Wednesday, June 23, 2010

அஜய்க்காக `வோட்கா' வாங்கி வருவேன். அதில் எனக்கு வருத்தமேதும் இல்லை'' - கஜோல்



``கடையில் நான் எனக்கு தேவையான பொருட்களை வாங்கி வரும்போது அஜய்க்காக `வோட்கா' வாங்கி வருவேன். அதில் எனக்கு வருத்தமேதும் இல்லை'' - கஜோல்

கஜோலும், அஜய் தேவ்கனும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் கசிந்ததும் இந்தித் திரையுலகமே ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தது. காரணம், இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேரெதிரானவர்கள். கஜோல் படபடவென்று பேசுவார், அஜய் பேசவே மாட்டார், கஜோல் கலகல சுபாவம் கொண்டவர், அஜயோ கலந்து பழகாத கூச்ச சுபாவம் கொண்டவர், கஜோல் சிவப்பு, அஜய் மாநிறம், கஜோல் அழகுத் தாரகை, அஜய் ஆணழகன் என்று கூற முடியாதவர்...

எப்படி இவர்களுக்குள் ஒத்துப் போகும் என்று ஒட்டுமொத்தத் திரையுலகமும் முணு முணுத்தது. ஆனால் இன்றோ, `தம்பதிகள்னா அவங்கள மாதிரித்தான் இருக்கணும்' என்று சொல்ல வைத்து விட்டார்கள்.

``எப்போதும் உற்சாகமும் துடிப்புமாக இருப்பவர் கஜோல். நானோ அதிகம் வாய் திறந்து பேச மாட்டேன். ஆனால் எங்களின் வேறுபாடுகளே நாங்கள் ஒன்று சேர்ந்தபோது எங்களை முழுமையாக்கி விட்டன. நான் ஒரு பெண்ணிடம் விரும்பிய அனைத்தும் கஜோலிடம் இருக்கின்றன'' என்று பெருமிதமான கணவராகக் கூறுகிறார் அஜய்.
அதேநேரம், தனக்கே உரிய தனிச்சிறப்பான கண்கள் சிரிக்க கஜோல், ``திருமணத்துக்குப் பின் நான் எல்லையற்று வளர்ந்திருக்கிறேன். இது ஒரு அற்புதமான அனுபவம். என் வாழ்வில் நடந்த மிகச் சிறந்த விஷயம், திருமணம். சரியான நபர் என்று ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால், நான் எனக்காகத் தேடிக்கொண்ட இவர்தான் அவர்'' என்று பூரிக்கிறார்.

``வழக்கமான `ஐ லவ் ï' சொல்லும் வேலையெல்லாம் நடக்கவில்லை. நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம், இயல்பாக பழகினோம், ஒருகட்டத்தில் நட்பைத் தாண்டிய ஒன்று எங்களுக்கு இடையே மலர்ந்திருப்பதை உணர்ந்தோம். ஆனால் அதைப் பற்றி பெரிதாகப் பேசவில்லை. திருமணம் தானாகவே நடந்துவிட்டது'' என்கிறார் அஜய் தேவ்கன்.
உங்கள் திருமண வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று கேட்டால் கஜோலின் பதில்-
``ரகசியம் என்றெல்லாம் எதுவும் இல்லை. கணவன்- மனைவிக்கு இடையே பரஸ்பர அக்கறை என்பது அவசியம். வெறுமனே `ஐ லவ் ï' சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. மகள் `நைசா'வைப் போலவே அவர் மீதும் நான் யாரும் இடைபுகாத அன்புடன் இருக்கிறேன். அதேநேரம் அவருக்கு என்று சுதந்திரம் வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதே உணர்வு அவருக்கும் உண்டு. எங்களுக்கு இடையே வாக்கு வாதமோ, சண்டையோ வந்ததில்லை என்று நான் கூற மாட்டேன். அவைதானே வாழ்க்கையில் சுவை சேர்க்கின்றன?'' என்று நடைமுறை சார்ந்தவராகப் பேசுகிறார் கஜோல்.
கஜோல் கர்ப்பமாக இருந்தபோது, படப்பிடிப்பில் இருந்தாலும் மணிக்கொரு முறை அவருக்கு போன் செய்து கொண்டே இருந்தாராம் அஜய். கஜோலுக்கு தினசரி ஒரு பெட்டி பழங்கள் அனுப்பிக் கொண்டே இருந்திருக்கிறார்.
``இன்றும் ஒவ்வொரு நாள் மாலையும் வீட்டில் கஜோலைப் போய் பார்க்கும்போது, நாங்கள் ஆரம்பத்தில் பழகியபோது இருந்த அதே உற்சாகமும், ஆர்வமும் எனக்கு இருக்கிறது'' என்று வார்த்தைகளில் சந்தோஷத்தை வழிய விடுகிறார் அஜய்.
அஜயைப் பற்றி கஜோல் ஒருமுறை கூறும்போது, ``அஜயிடம் எரிச்சலூட்டும் பழக்கங்கள் அதிகம் இருக்கின்றன என்றபோதிலும், அஜய் அல்லாத ஒருவரை நான் விரும்பியிருக்க மாட்டேன். ஒரு கச்சிதமான மனிதர் என்பவர் போரடிப்பவராகத்தான் இருப்பார். அஜய் வித்தியாசமான நகைச்சுவை உணர்வு கொண்டவர், நல்ல சமையல் கலைஞர், தூய்மையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்''" என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்புரை


நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-

தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், கூட்டி யிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, இப்போது தொடங்குகிறது!

மாநாட்டினைத் தொடங்கி வைத்து உரையாற்றுவதற்கு; தமிழ் மக்களின் அன்பான அழைப்பினை ஏற்று, இங்கே வருகை தந்திருக்கும், மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் அவர்களே!

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான, முதல் பெண் வேட்பாளர் என்கிற முறையில், உங்களை ஆதரித்து, சென்னையில், நடைபெற்ற மாபெரும் மகளிர் பேரணியின்போது, முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள், உங்களு டைய அரும்பணிகளுக்கு அரிய துணையாக, நாமெல் லோரும் இருப்போம், என்று சொன்னதை நினைவு கூர்ந்து, மேதகு இந்தியக் குடியரசுத் தலைவராகிய உங்களை, தமிழ் நாட்டு மக்களின் சார் பாக, வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

மாநாட்டுச் சிறப்பு மலரை வெளியிட்டு, உரையாற்ற வருகை தந்துள்ள, மேதகு தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களே! முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு, எந்நாளும் இனிய நண்பராக உள்ள உங்களை, மாநாட்டுத் தலைமைக் குழுவின் சார்பில், வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

தொடக்க விழாவின் தலைவர், தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களே! தமிழகத்தின் பெருமையைச், சங்ககாலம் போல, மீண்டும் உலகம் போற்றக்கூடிய அளவுக்கு உயர்த்தவேண்டும் என்ற, கனவை நனவாக்க விடாமுயற்சி மேற்கொண்டுள்ள, சிறந்த அறிஞர் கலைஞர்Ó என்று, டாக்டர் மு.வரதராசனார் உள்ளிட்ட, தமிழறிஞர்களால் பாராட்டிப் போற்றப்பட்டுள்ள உங்களை; இங்கே கூடியிருக்கும் தமிழ் மக்களின் சார்பாகவும், மற்றும் அனைவர் சார்பாகவும், வருக! வருக! என்று வரவேற் கிறேன்.

தகுதியுரை வழங்கவுள்ள, நிதியமைச்சர் பேராசிரியர் அவர்களே!

தலைவர் கலைஞர் அவர் களோடு என்றென்றைக்கும், இணைந்து, ஈடற்ற பணியாற்றி வரும் உங்களை, மாநாட்டு வரவேற்புக் குழுவின் சார் பாக வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களே! சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களே! பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர் களே! மாநாட்டுக்காக அமைக் கப்பட்டிருக்கும், பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப் பாளர்களே! உறுப்பினர் களே! தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளே, அலுவலர்களே! ஆசிரியப் பெருமக்களே! தொழிலா ளத் தோழர்களே! பெரியோர் களே, தாய்மார்களே, நண் பர்களே! உங்கள் அனைவரையும் வருக!வருக! என்று வரவேற்கிறேன்.

தமிழ்மொழி, உலகின் மிக உயர்ந்த செவ்வியல் இலக்கியங்களையும், மரபுச் செல்வங்களையும், பெற்றுத்திகழும் உயர்தனிச் செம் மொழிகளுள் ஒன்று என்ப தனை, நான் எவ்விதத் தயக்கமுமின்றித் தெளிவாக அறுதியிட்டுக் கூறுவேன் என்று பிரகடனம் செய்து,- பன்மொழிப் புலவராகத்திகழும், ஆய்வரங்க ஆலோசனைக் குழு உறுப்பினர், அமெரிக்க நாட்டுப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களே! உங்களை வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

தமிழ், இன்று ஒரு மாநில மொழி மட்டுமன்று; ஒரு நாட்டுமொழி மட்டுமன்று; அது ஒரு குவலயக் குடும்பத்தின் தாய்மொழி. தமிழ், உலகு தழுவி வாழும், ஒரு மொழிக்குடும்பத்தின் தாய் மொழி என்பது, உலகு ஒப்பிய உண்மைÓ என்று எடுத்தியம்பிய, உலகத் தமிழாய்வு நிறுவனம் - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ஆகியவற்றின் துணைத் தலைவர் முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களே! உங்களை வருக!வருக என்று வரவேற்கிறேன்.

தமிழ் ஆய்வு, மற்றும் தமிழ் விமர்சனம் ஆகிய வற்றைப், பல்துறை சார்ந்த பரிமாணங்களில், வெளிப்படுத்தும் திறன் மிக்க வரும்; தமிழ்ச் சமூக வர லாற்றை, பல்வேறு தரவுகளின் ஊடாக எழுதும் வாய்ப்பினைப் பெற்று, சரியான புரிதலை உருவாக்கிய; முதுதமிழ்ப் பேராசிரியருமாகிய, மாநாட்டு ஆய்வரங்கத்தின் அமைப்புக் குழுத்தலைவர், இலங்கை நாட்டுப் பேராசிரியர் கா.சிவத் தம்பி அவர்களே! உங்களை வருக! வருக! என்று வர வேற்கிறேன்.

சிந்துசமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே; அங்கே இருந்தவர்கள் திராவிட மொழி பேசியவர்களே என்று, உலகெங்கிலும் உள்ள ஆய்வறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஆதாரங்க ளோடு நிரூபித்துக் காட்டிய வரும்,

முதல், கலைஞர் செம் மொழி விருதினைப் பெற்று, ஏற்புரை ஆற்ற வருகை தந்தி ருக்கும், பின்லாந்து நாட்டுப்பேராசிரியர், அஸ்கோ பர்ப்போலா அவர்களே! உங் களை வருக!வருக! என்று வரவேற்கிறேன்.

தமிழ்ச் சான்றோர்களே! தமிழறிஞர்களே!

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்; வீரங்கொள் கூட்டம்; அன்னார், உள்ளத்தால் ஒரு வரே!

மற்றுடலினால் பலராய்க்காண்பார்!

என்ற பாவேந்தர் பாரதி தாசன் பாடல்வரிகளுக்கேற்ப; இங்கே ஆயிரம், பல்லாயிரம், இலட்சோப லட்சமெனத்திரண் டிருக்கும் தமிழ்ப் பெரு மக்களே! உங்கள் அனை வரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறேன்!

தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வன்மை, தாய்மை, தூய்மை, செம்மை, முழுமை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை ஆகிய அனைத்தையும், பெற்றுள்ள ஒரேமொழி தமிழ்மொழி தான் என்று, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறிவித்தார்.

தமிழை- அமுதத்தமிழ், இன்பத்தமிழ், இனிமைத்தமிழ், கனித்தமிழ், கன்னித் தமிழ், கன்னல் தமிழ், சங்கத் தமிழ், தங்கத்தமிழ், தனித்தமிழ், தாய்த்தமிழ், செந்தமிழ், செழுந்தமிழ், சுந்தரத் தமிழ், தூய தமிழ்,

தெள்ளு தமிழ், தேன்தமிழ், தேமதுரத்தமிழ், பைந்தமிழ், படைத்தமிழ், பொற்றமிழ், நற்றமிழ், மங்காத்தமிழ், மாத்தமிழ், முத்தமிழ், வாழும்தமிழ், வளரும்தமிழ், வற்றாத்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வெற்றித்தமிழ் - என்றெல்லாம் புலவர்களும் அறிஞர்களும், போற்றிப் புகழ்ந்துரைத்து இருக்கின்றார்கள்.

தமிழ், உலகின் மூத்த மொழி மட்டுமல்ல; முதல் செம்மொழியும் ஆகும். அதனால்தான், பாவேந்தர் பாரதிதாசன்,

கனியிடை ஏறிய சுளையும்-

முற்றல், கழையிடை ஏறிய சாறும்;

பனிமலர் ஏறிய தேனும்,-

காய்ச்சுப், பாகிடை ஏறிய சுவையும்;

நனி பசு பொழியும் பாலும்-

தென்னை, நல்கிய குளிர் இளநீரும்;

இனியன என்பேன்; எனினும், -

தமிழை, என்னுயிர் என் பேன் கண்டீர்! - என்று உலகுக்குப் பிரகடனம் செய்தார்.

அண்ணல் காந்தியடிகள்; எனது வாழ்க்கையில், ஏதாவது ஒன்றைப் பற்றி நான் வருந்துகிறேன் என்று சொன்னால், அது உயர்ந்த மொழியாகிய, தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லையே, என்பது பற்றித்தான் என்று தமிழ்மொழியை பெருமைப்படுத்தி கூறியுள்ளார். அத்தகைய இனிமையும் தனித்தன்மையும், வாய்ந்தது தமிழ்மொழி.

திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் அவர்கள், ஒரு தமிழனாகப் பிறக்க வில்லையே என ஏங்கினார்.

அவர், தான் தமிழ் மொழியின்பால் கொண்டபற்றின் அடையாளமாக, தமது கல்லறையில், ஜி.யு.போப், ஒரு தமிழ்மாணவன் என்று பொறிக்க வேண்டுமென விரும்பினார்.

அத்தகைய ஈர்ப்பும், இன்ப மும் கொண்டது தமிழ் மொழி. அத்தமிழ் மொழியை, முனைப்போடு முன்னெடுத்துச் செல்வதற்கான, வழிவகைகளை வகுத்துச் செயல்படுத்திட, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை, தலைவர் கலைஞர் அவர்கள் இங்கே கூட்டியிருக்கிறார்கள்.

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை, மூச்சினை உனக்களித்தேனே! நைந்தாய் எனில், நைந்து போகும் என்வாழ்வு; நன்னிலை உனக்கெனில், எனக்கும் தானே! - என்ற உள்ளத்து உணர்வோடும், எழுச்சி யோடும், இங்கே திரண்டிருக்கும், உங்கள் அனை வரையும் வருக! வருக! என்று, உள்ளன்போடு, மகிழ் வோடு வரவேற்று விடை பெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!

இவ்வாறு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.